Saturday 6 July 2019

காலம்...

பிள்ளைங்க சின்னதில இருந்து எப்படா வளரும்னு அவங்க சேட்டை பன்ற சமயத்திலலாம் நிறைய சலிச்சிருக்கேன்... அப்பலாம் புரியல ...வளர்ந்த பிறகு நம்மளோட தேவை அவங்களுக்கு குறையும் போதுதான் நாம சலிச்சுகிட்டது வசந்த காலங்களைனு..

காலைல அரக்கபரக்க அவங்கள கிளப்பி நானும் கிளம்பி பின்னாடி மகளையும் முன்னாடி மகனையும் உக்கார வச்சு பள்ளிக்கூடம் கொண்டு போய் விடும்போது.. மகளோட அந்த பிஞ்சுக்கை இறுக்கமா என் இடுப்ப வளச்சி பிடிச்சிருக்கும்... அது இப்ப கிடைக்கிறதில்ல..

வெள்ளிக்கிழமை ஆனா வீட்ல விளக்க வச்சிட்டு அம்மாவும் பிள்ளைங்களுமா ஒரே கலர்ல டிரெஸ்ஸ போட்டு கோயிலுக்கு நடந்தே போவோம்.. அப்ப இரண்டு பேரும் பன்ற குறும்பு நினைவுல மட்டுமே இருக்கு..

எதிர்த்த வீடு பக்கத்து வீடு னு எத்தன பேரு திட்டினாலும் .. நீ விளையாடுடா மகனேனு மகன் விளையாண்ட கிரிக்கெட்டுக்கு அம்பயரா இருந்த காலம் திரும்ப வரப்போவதில்லை..

சொன்னாலும் கேக்காம ஒரே கால்சட்டைய மகன் போட அதை பரண் மேல ஒளிச்சு வச்சுட்டு அவன் தேடின அழகை  திரும்ப பாக்க போவதில்லை..

இரண்டாம் வகுப்புல மகளுக்கு நடந்த திருக்குறள் ஒப்பிக்கிற போட்டில அவ சொன்ன அந்த 200 திருக்குறள திரும்ப கேட்க போவதுமில்லை..

நினைவுகளா சேமிச்சிருக்கிற விசயங்கள அசைபோட்டு பாக்கிறேன் மக மடில படுத்துகிட்டே.. பண்ணிரெண்டாம் வகுப்பு பசங்க வரை நம்மோட இருக்கிற காலங்கள் தான் வசந்த காலங்கள்...

கல்லூரி விடுமுறை முடிஞ்சு மக இன்னும் பத்து நாள்ல விடுதி கிளம்பிடுவா.. மகனோ  காலைல 7.30 கு ஸ்கூலுக்கு போனா மாலை ஆறுக்கு தான் வருவான்... தனிமை கொஞ்சம் கடினமா தாக்கும்...வேலைப்பளு இதை எல்லாம் நம்மை கடக்க வச்சிடும்...

ஆனா கிடைக்கிற ஒவ்வொரு நிமிசத்தையும் நுரையீரல முழுவதுமா நிறைச்சிடுற வேகத்தோட இழுக்கப்படுற மூச்சு மாதிரி வாழனும்...

எதையும் அவசரமா கடந்திடாதீங்க.. நிதானமா புள்ளைங்களோட அத்தனை அசைவுகளையும் ரசிச்சு வாழுங்க.. ஒவ்வொரு நொடியிலயும் நமக்கான சந்தோசங்கள அவங்கள தவிர வேற யாராலயும் தர முடியாது...